நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:தாராபுரம் போலீஸ் குடியிருப்பில், போலீஸ்காரர் துாக்குமாட்டி தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழரசன், 27. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக 'அல்சர்' பிரச்னை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து சென்றவர், போலீஸ் குடியிருப்பில் உள்ள தான் தங்கியிருந்த வீட்டில் துாக்கு மாட்டி இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.