/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகன சோதனையில் விபத்து போலீஸ்காரர் கால் உடைந்தது
/
வாகன சோதனையில் விபத்து போலீஸ்காரர் கால் உடைந்தது
ADDED : மார் 20, 2025 05:05 AM
அனுப்பர்பாளையம் : வாகன சோதனையின் போது, வாலிபர்கள் ஓட்டி வந்த பைக் மோதியதில், போலீஸ்காரரின் கால் உடைந்தது.
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருபவர் தஸ்தகீர், 32. இவர் கடந்த, 16ம் தேதி இரவுகுன்னத்துார் போலீஸ் நிலைய எல் லைக்கு உட்பட்ட சங்கர் மஹால் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அவ்வழியே ஒரே பைக்கில் மூன்று பேர் வந்தபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், போலீசாரிடமிருந்து தப்பிக்க வேகமாக வாகனத்தை இயக்கியதில், தஸ்தகீர் மீது பைக் மோதியது.
இதில், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து, திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த சரவணன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர் தஸ்தகீரை, எஸ்.பி., அசோக் கிரீஷ் யாதவ், அவிநாசிடி.எஸ்.பி., சிவகுமார்ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து, ஆறுதல் கூறினர்.