/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
/
மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
ADDED : பிப் 20, 2024 05:38 AM
திருப்பூர்: பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து முகாம், மார்ச் 3ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க, பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும், பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படுகிறது.
வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முகாம் நடைபெறும்; இந்தாண்டு, மார்ச் 3ல் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
மாநிலம் முழுக்க, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் முகாம் நடைபெற உள்ளது; அரசு, தனியார், தன்னார்வலர்கள், பொது நல அமைப்பினர் என ஒரு லட்சம் பேருக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்த, ஆரம்ப, துணை சுகாதார நிலையம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பொது இடங்களில், நடமாடும் மருத்துவக்குழு, மொபைல் வாகனம் மூலம், காலை 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை சொட்டு மருந்து வழங்க, பொது சுகாதாரத்துறை ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

