/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யா வழக்கில் அரசியல் தலையீடா? ஆர்ப்பாட்டம் நடத்த மாதர் சங்கம் முடிவு
/
ரிதன்யா வழக்கில் அரசியல் தலையீடா? ஆர்ப்பாட்டம் நடத்த மாதர் சங்கம் முடிவு
ரிதன்யா வழக்கில் அரசியல் தலையீடா? ஆர்ப்பாட்டம் நடத்த மாதர் சங்கம் முடிவு
ரிதன்யா வழக்கில் அரசியல் தலையீடா? ஆர்ப்பாட்டம் நடத்த மாதர் சங்கம் முடிவு
ADDED : ஜூலை 01, 2025 11:41 PM
அவிநாசி; கணவர் சித்ரவதை மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமை காரணாக தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ரிதன்யாவின் வீட்டுக்கு சென்று அவரின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய, மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ராதிகா, நிருபர்களிடம் கூறியதாவது:
ரிதன்யாவின் குடும்பத்தினர், அவரின் கணவர் வீட்டார் குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்களை கூறினர். வரதட்சணை கொடுமை குறித்து போலீசாரிடம் புகார்கள் வருகிறபோது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரதட்சணை என்பது கொடுங்குற்றம் என அரசு பிரசாரத்தை மக்களிடமும் கல்லுாரிகளிலும் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வரதட்சணை கொடுமை அதிக அளவில் நடந்து வருகின்றது. வரதட்சணை கொடுமை வழக்குகளில் தண்டனை என்பது மிகமிக குறைவாக வழங்கப்படுகிறது. புது மணப்பெண் ரிதன்யா வழக்கில் கணவர் மற்றும் மாமனார் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழக அரசின் போலீசார் செயல்பாடு இருக்க வேண்டும். எவ்விதமான அரசியல் தலையீடும் இருக்க கூடாது. அவரின் தற்கொலைக்கு நீதி கேட்டு, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டச் செயலாளர் பானுமதி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஷகிலா, சாவித்திரி, மைதிலி, பொருளாளர் கவிதா, துணைச் செயலாளர் லட்சுமி, செல்வி, ஒன்றிய தலைவர் சித்ரா, பொருளாளர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ரிதன்யாவின் குடும்பத்தினரை சந்தித்த மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன், மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் மூர்த்தி, சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கணேசன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.