/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள் நீக்கம்
/
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள் நீக்கம்
ADDED : ஆக 18, 2025 10:41 PM
திருப்பூர்; கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
ஏராளமான அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னரும், ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாமல் உள்ளன. கடந்த 2019 முதல், ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற எந்த தேர்தலிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவுகளை நீக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், காந்திநகர் ஏ.வி.பி., லே அவுட்டில் செயல்படும் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னரும், ஆறு ஆண்டுகளாக, எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாதது கண்டறியப்பட்டுள்ளது.
அக்கட்சியினர், வரும் 26ம் தேதிக்குள், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் ஆஜராகி, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவேண்டும். விசாரணை முடிவடைந்த பின்னர், தலைமை தேர்தல் அலுவலரால், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.