/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றிக்கனவுடன் அரசியல் கட்சியினர்!
/
வெற்றிக்கனவுடன் அரசியல் கட்சியினர்!
ADDED : பிப் 14, 2024 11:54 PM
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் - தொழில்துறை, இரு கண்களைப் போன்றவை.
விவசாயிகள், தொழில்துறையினர், தொழிலாளர்களுடன் இளம் வாக்காளர்கள், தாய்மார்களின் ஓட்டுகளைப் பெற அரசியல் கட்சியினர் துடிக்கின்றனர். தற்போதே அரசியல் கட்சிக் கூட்டங்களில், விமர்சனங்களும், எதிர் விமர்சனங்களும் வரிசை கட்டுகின்றன.
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியினர் திருப்பூர் தொகுதியில் வெற்றிவாகை சூட முனைப்பு காட்டுகின்றனர். நாம் தமிழர் கட்சியினர், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப் பாளர் சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்துள்ளனர். கடந்த, 2019 தேர்தலில், நாம் தமிழர் கட்சியினர் 3.78 சதவீத ஓட்டுகளை பெற்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் கூறுகையில், ''கட்சிக்கான ஓட்டு வங்கி கணிசமாக உயர்ந்திருக்கிறது. வரும் தேர்தலில், இதனை நன்கு உணர முடியும்,'' என்றார்.
நாம் தமிழர், தொழிற்சங்க பேரவை மாநில இணை செயலாளர் சுரேஷ்பாபு கூறுகையில், ''பனியன் தொழிற்சார்ந்த பிரச்னைகளை முன்னெடுக்கும் வகையில், 18 பிரிவுகளில் தொழிற்சங்க அமைப்பு உருவாக்க உள்ளோம். எங்களுக்கான ஓட்டு வங்கி அதிகரித்திருக்கிறது,'' என்றார்.

