/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு; சிக்கிய பிரின்டிங் நிறுவனங்கள்
/
மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு; சிக்கிய பிரின்டிங் நிறுவனங்கள்
மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு; சிக்கிய பிரின்டிங் நிறுவனங்கள்
மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு; சிக்கிய பிரின்டிங் நிறுவனங்கள்
ADDED : ஜூலை 16, 2025 11:19 PM

திருப்பூர்; மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத சாய, சலவை ஆலைகள், பட்டன் ஜிப் டையிங், பிரின்டிங் நிறுவனங்கள் ஆங்காங்கே இயங்குகின்றன. அடுக்குமாடி கட்டடங்களில் ரகசியமாக இயங்கும் இந்நிறுவனங்கள், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை, அருகிலுள்ள சாக்கடை கால்வாய்களில் திறந்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
அங்கேரிபாளையம் மெயின் ரோட்டில், சாக்கடை கால்வாயில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதாக, பொதுமக்களிடமிருந்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாசுகட்டுப்பாடு வாரிய பொறியாளர் லாவண்யா தலைமையில், உதவி பொறியாளர் கதிர்வேல், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கோகுல் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று, அங்கேரிபாளையம் ரோடு பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் மூன்று பிரின்டிங் மெஷின்களுடனும்;அதேபகுதியில், இரண்டு மெஷின்களுடன் செயல்பட்ட மற்றொரு பிரின்டிங் நிறுவனமும் அனுமதி பெறாமல் இயங்கியது தெரியவந்தது.
அந்நிறுவனங்கள், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை, குழாய் மூலம், சாக்கடை கால்வாயில் வெளியேற்றியதும், ஆய்வில் தெரியவந்தது.
இவ்விரு பிரின்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்து, நடவடிக்கை எடுக்க, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புக்குழு தலைவரான கலெக்டருக்கு பரிந்துரைக்க உள்ளதாக, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.