/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்ச பூதங்களையும் பயமுறுத்தும் பாலிதீன்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாசுகட்டுப்பாடு வாரியம்

ADDED : ஜூன் 24, 2025 11:46 PM
திருப்பூர்; 'பாலிதீன் பை பயன்பாடு, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது' என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில், விழிப்புணர்வு பாடல் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.
பாலிதீன் பை அது சார்ந்த பொருட்களின் பயன்பாடு என்பது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
வீசியெறியப்படும் பாலிதீன் பை, மண் வளத்தை நாசமாக்குகிறது என்ற விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது.
இருப்பினும், பாலிதீன் பை பயன்படுத்தும் பழக்கத்தை, மக்களும் குறைத்துக் கொள்வதில்லை; கடைக்காரர்களும் அதை தவிர்ப்பதில்லை.
பாலிதீன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பை மக்கள் மத்தியில் உணர்த்தும் நோக்கில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், நான்கு நிமிடம் ஓடக்கூடிய விழிப்புணர்வு பாடல் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.
அதில், 'பாலிதீன் பயன்பாடால் மண் வளம் கெடுவதுடன், அவற்றை உண்ணும் கால்நடைகளும் வயிறு வீங்கி பலியாகின்றன' என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், 'பாலிதீன் பயன்பாட்டால் பஞ்ச பூதங்களும் பதட்டமடைகிறது; அந்த பதட்டத்தை தணிக்கும் முதல் நபராக நாம் இருக்க வேண்டும்; அனைவரும் பாலிதின் பையை தவிர்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்' என்ற அறிவுரையும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.