/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலிதீன் பறிமுதல்; ரூ.42 ஆயிரம் அபராதம்
/
பாலிதீன் பறிமுதல்; ரூ.42 ஆயிரம் அபராதம்
ADDED : டிச 27, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, முதலாவது மண்டல சுகாதார பணியாளர்கள் நேற்று அவிநாசி ரோடு பகுதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நான்கு கடைகளில் பாலிதீன் பை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. கடைகளில் இருந்து, 200 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டு, 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

