/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுகளால் நிறம் மாறிய குட்டை; துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கழிவுகளால் நிறம் மாறிய குட்டை; துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
கழிவுகளால் நிறம் மாறிய குட்டை; துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
கழிவுகளால் நிறம் மாறிய குட்டை; துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 24, 2025 11:49 PM

பல்லடம்; பல்லடத்தை அடுத்த, புளியம்பட்டி, அனுப்பட்டி, பணிக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வரும் நீரோடை, பல்லடம் நகராட்சியை கடந்து, ஒன்பதாம் பள்ளம், தெற்குபாளையம், கரைப்புதுார் வழியாக நொய்யல் நதியுடன் இணைகிறது.
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை பல ஆண்டு காலமாக, நீரோடையில் கலந்து வருவதால், ஓடை மாசடைவதுடன், இவ்வழியாக செல்லும் மழை நீரும் கழிவுநீராக மாறி வருகிறது.
இவ்வாறு, நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவை, ஒன்பதாம் பள்ளம் குட்டையில் சென்றடைவதால், குட்டை நீர் முழுமையாக மாசடைந்து நிறம் மாறி காணப்படுகிறது.
ஒன்பதாம் பள்ளம் குட்டை முழுமையாக நிரம்பினால், சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகள், பொதுமக்கள் பயனடைவர். ஆனால், நகராட்சியின் கழிவு நீர் மற்றும் குப்பைகள் ஓடையில் கலப்பதால், குட்டை நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. பல ஆண்டு காலமாக குட்டைக்குள் கலந்த கழிவுகள், குப்பைகள், நிலத்தடியில் தேங்கி உள்ளதால், குட்டையில் சேகரமாகும் நீர் பூமிக்குள் இறங்குவதில்லை.
மேலும், இதில் மீன்களை சிலர் பிடித்து சென்று விற்பனை செய்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயமும் உள்ளது. மாசடைந்த இந்த குட்டையை முழுமையாக துார்வார வேண்டும்.
மேலும், பல்லடம் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பைகள் உள்ளிட்டவை, குட்டைக்குள் கலக்காத வகையில், சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவ சாயிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.