/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் - 2 பஸ், ரயில்கள் 'ஹவுஸ்புல்'
/
பொங்கல் - 2 பஸ், ரயில்கள் 'ஹவுஸ்புல்'
ADDED : ஜன 12, 2025 11:38 PM

திருப்பூர்; பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூரில் நேற்று காலை முதல் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகரித்தது.
கோவையில் இருந்து திருப்பூர் வந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்சி பாசஞ்சர், கோவை மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது பெட்டியில் ஏற பயணிகள் முண்டியடித்தனர். ஈரோடு, சேலம், கரூர் வழியாக செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், பிளாட்பார்மில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் காலை சற்று கூட்டம் குறைவாக இருந்தது. மதியத்துக்கு பின் அதிகமானது. மாலை மற்றும் இரவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் ஏற திரண்டனர்.
அதிகளவு சிறப்பு பஸ் இயக்கம் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் என்பதால், காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழையும் பஸ்சில் முண்டியடித்து சிலர் ஏறினர். இன்று தான் பயணிகள் எண்ணிக்கை சிறப்பு பஸ்களில் முழு அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.