/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் பொங்கல் விழா
/
ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2025 04:18 AM
திருப்பூர் : ஆண்டிபாளையம் குளத்தில், அரசுத்துறை சார்பில், முதன் முறையாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
திருப்பூர் நகரப்பகுதியில் ஆண்டிபாளையம் குளம், நஞ்சராயன் பறவைகள் சரணலாயம் ஆகியவை சுற்றுலா முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தளங்களை மேம்படுத்தி, அதிகளவில் பயணிகளை ஈர்க்கும் வகையிலான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ஆண்டி பாளையம் குளத்தில், சுற்றுலாத்துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகு சவாரி விடப்பட்டுள்ளது. வார விடுமுறை நாட்களில், ஏராளமானோர் படகு சவாரியில் ஈடுபடுகின்றனர்.
'சுற்றுலா தலங்களை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோடை விழா நடத்துவது தொடர்பாக, உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று முயற்சி மேற்கொள்ளப்படும்,' என, மாவட்ட சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, ஆண்டிபாளையம் படகு இல்லத்தில், இன்று, (16ம் தேதி), மாவட்ட சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்துறை அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினருக்கு சுற்றுலா துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் கூறுகையில், ''காலை, 10:30 மணிக்கு பொங்கல் வைக்கப்படும். தொடர்ந்து, வள்ளிக்கும்மி, தப்பாட்டம், திடும்ஆட்டம் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

