/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லயன்ஸ் சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
/
லயன்ஸ் சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 13, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:பல்லடம் அடுத்த ஆறாக்குளத்தில் அமைந்துள்ள லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி, திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் அவிநாசி ஆதீனம் காமாட்சி தாச சுவாமி பங்கேற்று அருளுரை வழங்கினார். கோ பூஜையை தொடர்ந்து, பொங்கலிட்டு வழிபட்டனர்.
பள்ளி அறக்கட்டளை சேர்மன் மெஜஸ்டிக் கந்தசாமி, லயன்ஸ் கவர்னர் ஜெயசேகரன், துணை கவர்னர் ராஜசேகர், நிர்வாகிகள் கோவிந்தராஜ், நாச்சிமுத்து, பாலாஜி, சண் முகம், மூர்த்தி, சதாசிவம், செந்தில்குமார், மயில்சாமி மற்றும் மாணவர்கள், மாணவ பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.