sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நகராட்சி அலுவலகங்களில் பொங்கல் விழா

/

 நகராட்சி அலுவலகங்களில் பொங்கல் விழா

 நகராட்சி அலுவலகங்களில் பொங்கல் விழா

 நகராட்சி அலுவலகங்களில் பொங்கல் விழா


ADDED : ஜன 15, 2026 06:33 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார்.

கமிஷனர் அருள் வரவேற்றார். வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, நகராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. உரியடி, இசைநாற்காலி ஆகிய போட்டி நடந்தன.

அவிநாசி அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் நேற்று சமத்துவ சுகாதாரப் பொங்கல் நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில், கொண்டாடப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊழியர்களை பாராட்டி வாழ்த்தினர். சிறப்பாக கோலமிட்ட துாய்மை பணியாளர்களுக்கும், தப்பாட்டம், கும்மி, இசை நாற்காலி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற துாய்மை மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பொங்கல் படையலிட்டு வழிபட்டு பொங்கல் பானையை சுற்றி சுகாதார ஊழியர்களுடன் நகராட்சி தலைவர், அலுவலர்கள் பாட்டு பாடி கும்மி அடித்து வழிபட்டனர். ஏற்பாட்டினை சுகாதார ஆய்வாளர் அரவிந்தன் செய்திருந்தார்.

திருமுருகன்பூண்டி திருமுருகன்பூண்டி புதிய நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

துாய்மை மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோருக்கும் சிறப்பாக கோலமிட்டவர்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us