/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்
/
ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 16, 2025 04:25 AM

பல்லடம், : பல்லடம் அருகே, ஏழு கிராமங்களின் சார்பில், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.
பல்லடத்தை அடுத்த, நாரணாபுரம் கிராமம், தெற்குபாளையத்தில், மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா டிச., 31 அன்று துவங்கியது.
தெற்குபாளையம், நாரணாபுரம், மாதம்புதுார், கல்லம்பாளையம், மாணிக்காபுரம், அம்மாபாளையம், ராசாகவுண்டம்பாளையம், ராயர்பாளையம் புதூர் ஆகிய ஏழு கிராமங்களின் சார்பில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, 11ம் தேதி, அம்மை அழைத்தல், கம்பம் நடுதல், மறுநாள், கும்மியாட்டம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, ஏழு ஊர் பொதுமக்கள் சார்பில் மாவிளக்கு எடுத்துவரப்பட்டது. இதனையடுத்து, காவடி ஆட்டம், பொங்கல் விழா ஆகியவை நடந்தன. ஏழு ஊர் பொதுமக்களும் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
இன்று, அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடைபெற உள்ளன. நாளை, அபிஷேக அலங்கார பூஜைகளுடன் விழா நிறைவடைகிறது.

