/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் குடியிருப்பில் பொங்கல் விழா
/
போலீஸ் குடியிருப்பில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2025 09:25 PM

உடுமலை:
உடுமலை டி.எஸ்.பி.,அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பில் பொங்கல் விழா நடந்தது.
உடுமலை டி.எஸ்.பி.,அலுவலகம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸ் குடியிருப்பு ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகையான நேற்று, இங்கு போலீசார் பொங்கல் வைத்து, வழிபட்டனர். டி.எஸ்.பி., வெற்றிவேந்தன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
தொடர்ந்து, போலீஸ் குடியிருப்பிலுள்ள குழந்தைகள், பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடி உற்சாகமாக கொண்டாடினர். உடுமலை போலீஸ் ஸ்டேஷனிலும், சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
* கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில், போலீசார் அனைவரும் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து, வழிபட்டனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்து கூறி அன்பை வெளிப்படுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.