ADDED : ஜன 18, 2024 12:27 AM
திருப்பூர் : திருப்பூர், நல்லுாரில், காங்., கட்சி சார்பில், இந்திரா நகரில் பொங்கல் விழா நடந்தது. சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு, பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு மியூசிக் சேர், ஆண்களுக்கு உறியபடி, பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் விழாவை காங்., மாநில செயற்குழு உறுப்பினர் கோபால்சாமி ஒருங்கிணைத்தார். நல்லுார் வட்டார தலைவர் சரவணன், செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
l பண்டிட் தீனதயாள் உபாத்தியாய சேவை மையத்தில், பொங்கல் விழாவை முன்னிட்டு, 4ம் ஆண்டு கோலப் போட்டி நடந்தது. சேவை மைய நிறுவனர் நடராஜ் தலைமை வகித்தார். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, கோலமிட்டனர்.
ராஜலட்சுமி, முதல் பரிசு பெற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக, கோவில் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.