/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
/
ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
ADDED : மே 02, 2025 12:23 AM

அவிநாசி; அவிநாசி, கைகாட்டிப்புதுாரில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
இக்கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த 21ம் தேதி மஞ்சள் முடிப்பு, பொட்டுச்சாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல், லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து நுாற்றுக்கும்மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பொங்கல் விழாவில் நேற்று பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை, 10:00 மணிக்கு மகா மாரியம் மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், மஞ்சள் நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் வழிபாடு மன்ற அறக்கட்டளை, கைகாட்டிப்புதுார் மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.