/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பரிசுத்தெகை எம்.எல்.எப்., வலியுறுத்தல்
/
பொங்கல் பரிசுத்தெகை எம்.எல்.எப்., வலியுறுத்தல்
ADDED : ஜன 09, 2024 12:46 AM
திருப்பூர்;நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, பெரியார் மாவட்ட விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் பாண்டியராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
பொங்கல் பரிசுத் தொகையாக, தகுதியுள்ளவர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், 3,000 ரூபாய் உடனே வழங்க வேண்டும். நடுத்தர மற்றும் கூலி வேலை செய்வோர், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில் செய்வோரில் ஏராளமானோர், வங்கியில் வருமான வரி தாக்கல் செய்து, வங்கிக்கடன் பெற்றுள்ளனர்.
இதுபோன்றவர்களுக்கு, பொங்கல் பரிசுத்தொகை மறுக்கப்பட்டிருக்கிறது; இது, ஏற்புடையதாக இல்லை.எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள், நல வாரியத்தின் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கும், பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.