/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம் 7 நாளில் ரூ.1.31 கோடி வருவாய்
/
பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம் 7 நாளில் ரூ.1.31 கோடி வருவாய்
பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம் 7 நாளில் ரூ.1.31 கோடி வருவாய்
பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம் 7 நாளில் ரூ.1.31 கோடி வருவாய்
ADDED : ஜன 26, 2025 03:28 AM
திருப்பூர்: பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம் மூலம், திருப்பூர் மண்டலம், 1.31 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன., 10 முதல் 13 ம் தேதி வரை, ஜன., 17 முதல், 19ம் தேதி வரை என இரண்டு கட்டங்களாக திருப்பூரில் இருந்து, 592 சிறப்பு பஸ்கள் ஏழு நாட்கள் இயக்கப்பட்டது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதிகபட்சமாக, 1.10 லட்சம் பேர் திருப்பூரில் இருந்து வெளியூர் சென்றனர். மொத்தம், 2.50 லட்சம் பேர் வெளியூர் சென்று திரும்பினர்.
வழக்கமாக பஸ்களுடன் போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையை போல் பயணிகள் ஒரே நேரத்தில் பஸ்சில் ஏற பஸ் ஸ்டாண்ட்டுக்கு வராமல் அடுத்தடுத்த நாட்களில் பஸ்களுக்கு வந்ததால், சிரமங்கள் தவிர்க்கப்பட்டது. மேலாண்மை மற்றும் இயக்க குழுவினரும் சற்று ரிலாக்ஸாக பணியாற்றினர்.
பொங்கல் பண்டிகைக்கு முன் சிறப்பு பஸ் இயக்கம் மூலம், 62.89 லட்சம் வருவாய் ஈட்டிய திருப்பூர் மண்டலம், பொங்கல் பண்டிகை முடிந்து சிறப்பு பஸ் இயக்கத்தில், 68.42 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. மொத்தம், 1.31 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

