/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதியில் நிறுத்தப்பட்ட குளம் புனரமைக்கும் திட்டம்
/
பாதியில் நிறுத்தப்பட்ட குளம் புனரமைக்கும் திட்டம்
ADDED : ஆக 31, 2025 07:40 PM
உடுமலை; உடுமலை - பழநி ரோடு வெஞ்சமடை பகுதியில், பி.ஏ.பி., கால்வாய் அருகே, குளம் உள்ளது. பராமரிப்பு இல்லாமல், கழிவு நீர் தேங்கியும், புதர் மண்டியும் அடையாளத்தை இழந்து காணப்பட்டது.
இதனை, நீர் நிலைகள் மீட்கும் திட்டத்தின் கீழ், உடுமலை நகராட்சி சார்பில், 35 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
குளத்தைச்சுற்றிலும், கான்கிரீட் மற்றும் கருங்கற்கள் அடுக்கி கரை அமைத்து, பூங்கா, நடை பாதை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு, ஆறு மாதங்களுக்கு முன் பணி துவங்கியது.
சுற்றிலும் நடைபாதை அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் நடந்ததோடு, பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, பி.ஏ.பி.,கால்வாயில் நீர் திறக்கப்பட்டும், இப்பணி காரணமாக நீர் நிரம்பாமல் உள்ளது.
எனவே, உடனடியாக புனரமைப்பு பணியை துவக்கவும், திட்ட வடிவமைப்பு அடிப்படையில் பணியை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.