/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூமலுார் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
/
பூமலுார் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
ADDED : நவ 28, 2024 06:11 AM

திருப்பூர்; பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பூமலுார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகினர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த குழு விளையாட்டு போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள், டேபிள் டென்னிஸ் போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவுகளில், மாவட்ட அளவிலான போட்டியில், 7 பிரிவுகளில் பங்கேற்று, அவற்றில் முதலிடம் பெற்றனர். இதில், 14 வயது மாணவர் ஒற்றையர் பிரிவு - கதிர்வேல். இரட்டையர் பிரிவு - கதிர்வேல், பூவரசன். 17 வயது மாணவர் ஒற்றையர் பிரிவு - நித்திஷ். இரட்டையர் பிரிவு - நித்திஷ், கமலேஷ். 14 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவு - ஹாசினி. இரட்டையர் பிரிவு - ஹாசினி, ராகமிதா. 17 வயது மாணவியர் இரட்டையர் பிரிவு - சங்கமித்ரா, பிரவீனா.
போல் வால்ட் போட்டியில் 17 வயது பிரிவில் வைஷ்ணவி வெள்ளிப் பதக்கம், அனுப்பிரியா வெண்கலமும் வென்றனர். இவர்கள் அனைவரும் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ், உதவி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் கவுரி, செல்வகுமார் ஆகியோர் பாராட்டினர். பிரித்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பாலன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.