/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை
/
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை
ADDED : டிச 12, 2025 06:59 AM

உடுமலை: குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உடுமலை பெதப்பம்பட்டி ரோட்டில் உள்ள குறிஞ்சேரி கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஆண்டாளுக்கு உகந்த பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில், குறிஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.