தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆட்கொள்கிறது மது; அழிகிறது பணித்திறன்

ஆட்கொள்கிறது மது; அழிகிறது பணித்திறன்

ஆட்கொள்கிறது மது; அழிகிறது பணித்திறன்


ADDED : செப் 30, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள் பலரது பணித்திறன் மங்கியதாக தொழில்துறையினர் குற்றம் சுமத்துகின்றனர். பலரும் பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டத்துக்காக, மதுவை தொட்டவர்கள்; இன்றோ மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு மாறிவிட்டனர்.

வாரம் முழுவதும், கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள்; ஞாயிறு விடுமுறையை கொண்டாடினர். குடிப்பழக்கம் அதிகரித்த காரணத்தாலும், இளைஞர் முதல், முதியவர் வரை, மது, கைக்கு எட்டிய துாரத்தில் கிடைப்பதாலும், நிலைமைமாறிவிட்டது.

சனிக்கிழமை சம்பளம் வாங்கிய நிமிடத்தில் துவங்கிய கொண்டாட்டம், திங்கள்கிழமை காலை வரையும் தொடர்கிறது. ஞாயிறு கொண்டாட்டம் போதாது என்பதால், கையிருப்பு மிச்சத்துடன், திங்கட்கிழமையை, சிறிய ஞாயிறாக கொண்டாடுவது அதிகமாகிவிட்டது.

திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு, டாஸ்மாக் மதுக்கடைகள், பெரும் முட்டுக்கட்டையாக மாறும் அபாயம் உள்ளது. விற்பனை நேரத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே, 'குடி'நோயால் பீடிக்கப்பட்டநபர்கள் மீண்டு வரமுடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us