ADDED : ஏப் 21, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில், பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநாடு நேற்று நடந்தது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். கோட்ட உதவி செயலாளர் ரவிச் சந்திரன் வரவேற்றார். அகில இந்திய தலைவர் சந்திரபிரகாஷ், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குதல், காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக விஜயகுமார், செயலாளராக அசோக்கிருஷ்ணா, பொருளாளராக ரவிச்சந்திரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.