/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போஷன் பக்வாடா -- 2024'; ஊட்டச்சத்து விழிப்புணர்வு
/
'போஷன் பக்வாடா -- 2024'; ஊட்டச்சத்து விழிப்புணர்வு
'போஷன் பக்வாடா -- 2024'; ஊட்டச்சத்து விழிப்புணர்வு
'போஷன் பக்வாடா -- 2024'; ஊட்டச்சத்து விழிப்புணர்வு
ADDED : மார் 17, 2024 11:46 PM

உடுமலை;குடிமங்கலம் வட்டாரம், பெதப்பம்பட்டியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், 'போஷன் பக்வாடா -- 2024' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெதப்பம்பட்டி என்.வி.,பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி, ஊட்டச்சத்து உணவுகள், வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்து விளக்கினார்.
வட்டார வேளாண் உதவி அலுவலர் சுனில் கவுசிக், சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து விளக்கினார். இதில், பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்த கண்காட்சியும் நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், உதவியாளர்கள் வாயிலாக தானிய பாயாசம், சிறு தானிய கொழுக்கட்டை வகைகள் பரிமாறப்பட்டன. உள்ளூர் உணவுமுறை குறித்த விளக்க புத்தகம் வழங்கப்பட்டது. முன்னதாக, ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

