/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்பாண்ட தொழிலாளர் சங்க பொன் விழா
/
மண்பாண்ட தொழிலாளர் சங்க பொன் விழா
ADDED : டிச 23, 2024 04:15 AM

திருப்பூர் : தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாலர்) சங்கத்தின் பொன் விழா, திருப்பூர் மாவட்ட சங்கத்தின் 8ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று திருப்பூர் குலாலர் மண்டபத்தில் நடந்தது.
முன்னதாக சங்கக் கொடியேற்றப்பட்டது. மகளிர் அணியினர் குத்து விளக்கேற்றி வைத்தனர். மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட செயலாளர் கன்னிமுத்து வரவேற்றார். மாநில துணை தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த சங்க உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவிகள், பொது தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, மாநில தலைவர் சேம.நாராயணன் பேசினார். மாநில நிர்வாகிகள் கணபதி, மகேஷ்கண்ணன், பழனி, அன்பரசு, ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர். விழாவில் திரளான சங்க உறுப்பினர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

