/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி சங்க கூட்டமைப்பினர் அமைச்சர், அதிகாரிகளிடம் மனு
/
விசைத்தறி சங்க கூட்டமைப்பினர் அமைச்சர், அதிகாரிகளிடம் மனு
விசைத்தறி சங்க கூட்டமைப்பினர் அமைச்சர், அதிகாரிகளிடம் மனு
விசைத்தறி சங்க கூட்டமைப்பினர் அமைச்சர், அதிகாரிகளிடம் மனு
ADDED : ஜூன் 26, 2025 12:19 AM

பல்லடம்; சென்னையில், அமைச்சர் சாமிநாதன் மற்றும் துறை அதிகாரிகளை சந்தித்த விசைத்தறி சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமையில், பொருளாளர் பாலசுப்பிரமணியம், மண்டல பொறுப்பாளர்கள் பாலாஜி, பாலசுப்பிரமணியம், கோவை மாவட்ட பொருளாளர் செல்வகுமார், பல்லடம் விசைத்தறி சங்கப் பொருளாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த மனு:
மின்கட்டண உயர்விலிருந்து விசைத்தறி கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். விசைத்தறி கூடங்களில் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி மேற்கொள்ள மானியம் வழங்க வேண்டும். கிராமப் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களுக்கு அதிகளவில் சொத்து வரி விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.
இலவச வேட்டி - சேலை திட்டத்துக்கான பாவுநுால் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஊரக வளர்ச்சித் துறை கமிஷனர், கைத்தறி மற்றும் துணி நுால் துறை செயலர், கமிஷனர் ஆகியோரையும் சந்தித்தும் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.