/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறியாளர் பிரச்னை: அமைச்சரிடம் மனு
/
விசைத்தறியாளர் பிரச்னை: அமைச்சரிடம் மனு
ADDED : ஜன 23, 2025 12:21 AM
திருப்பூர்; 'கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி கூட்டமைப்பினர், கூலி உயர்வில் உள்ள பிரச்னையை சரி செய்து கொடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, விசைத்தறி கூட்டமைப்பினர் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் மனு வழங்கினர். கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் முறையிட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என, கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சந்திப்பில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பொன்னுசாமி, முத்துசாமி, பூபதி, ஆறுமுகம், குமாரசாமி, துரைசாமி, கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

