/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறிக்கூட உரிமையாளர் பலி; ஆக்கிரமிப்பு அகற்றாததன் விளைவு?
/
விசைத்தறிக்கூட உரிமையாளர் பலி; ஆக்கிரமிப்பு அகற்றாததன் விளைவு?
விசைத்தறிக்கூட உரிமையாளர் பலி; ஆக்கிரமிப்பு அகற்றாததன் விளைவு?
விசைத்தறிக்கூட உரிமையாளர் பலி; ஆக்கிரமிப்பு அகற்றாததன் விளைவு?
ADDED : ஏப் 22, 2025 06:15 AM
அவிநாசி; அவிநாசி அடுத்த நடுவச்சேரி ரோட்டில் உள்ள ஒடைக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன், 75, விசைத்தறிக்கூட உரிமையாளர். மாமர தோட்டம் பகுதியிலுள்ள பள்ளியில், பேரன், பேத்தி படிக்கின்றனர்.
நேற்று பள்ளியில் இருவரையும் விட்டுவிட்டு டூவீலரில் சேவூர் ரோட்டில், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே வந்தபோது, சாலையோரம் உள்ள காய்கறி கடைகளுக்கு, காய்கறி லோடுஇறக்குவதற்காக ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேனின் கதவை டிரைவர் திடீரென திறந்து உள்ளார்.
இதில் வேனின் கதவில் தலை பலமாக மோதியதில் ராஜன் பலியானார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
நல்லது நண்பர்கள் அறக்கட்டளை ரவிக்குமார் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிரந்தரமாக இந்த பகுதியில் காய்கறி கடைகள் முளைத்து தற்போது மடத்துப்பாளையம் ரோடு வரை நீண்டுள்ளது.
அவிநாசி நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த வருடம் 2022--23ம் ஆண்டு நிதி பங்களிப்பில் 4 கோடி ரூபாய் செலவில் அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து மடத்துப்பாளையம் பிரிவு வரை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்து சாலை பணியை மேற்கொண்டனர்.
இதில் ஒரு பகுதி அகலமாகவும் மற்றொரு பகுதி குறுகியதாகவும் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமாக அகற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முன்பு நான்காம் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலையை செப்பனிடாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
தாலுகா அலுவலகத்தில் இருந்து மடத்துப்பாளையம் பிரிவு வரை சாலை மிகவும் குறுகியதாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் உள்ளது.
இந்நிலையில் நேற்று விபத்து நடந்து விசைத்தறிக்கூட உரிமையாளர் இறந்துள்ளார். உடனடியாக போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்; சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, ரவிக்குமார் கூறினார்.
நெடுஞ்சாலைத்துறை அவிநாசி உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவேலிடம் கேட்டபோது, ''சேவூர் ரோட்டில் சாலையோரம் உள்ள காய்கறி கடைகள் பற்றிய விவரம் தெரியாது.
நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட இடத் தில் கடைகள் போடப்பட்டு இருந்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்'' என்றார்.