/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடும்பத்தினருடன் விசைத்தறியாளர் அவிநாசியில் 19ல் ஆர்ப்பாட்டம்
/
குடும்பத்தினருடன் விசைத்தறியாளர் அவிநாசியில் 19ல் ஆர்ப்பாட்டம்
குடும்பத்தினருடன் விசைத்தறியாளர் அவிநாசியில் 19ல் ஆர்ப்பாட்டம்
குடும்பத்தினருடன் விசைத்தறியாளர் அவிநாசியில் 19ல் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 15, 2025 11:14 PM

அவிநாசி; கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம், அவிநாசி அடுத்த தெக்கலுாரில், கிளை தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது. சோமனுார், கண்ணம்பாளையம், புதுப்பாளையம், அவிநாசி, பெருமாநல்லுார் கிளை தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
அவிநாசியில் இன்று நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வரும் 19ம் தேதி காலை 10:00 மணியளவில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசு அறிவித்த ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்த மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு கூலி உயர்வு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், அனைத்து பகுதி விசைத்தறியாளர்களும் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.