ADDED : ஏப் 04, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடும்ப நல அறுவை சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்ட டாக்டர்கள் மற்றும் குடும்ப நல ஆலோசகர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் கார்த்திகேயன், கோமதி, ஜனனி, நளினா, வித்யா, மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கவி ஆகியோருக்கு, 2023 - 24ம் ஆண்டில் தற்காலிக முறையில் சிறப்பாக பணிபுரிந்து குடும்ப நல சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக, கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டு சான்று மற்றும் பரிசு கோப்பை வழங்கினார்.
குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கவுரி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் ராணி, சார்லஸ் ராஜன், பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

