/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யோகாசன போட்டியில் அசத்தல்: மாணவர்களுக்கு பாராட்டு
/
யோகாசன போட்டியில் அசத்தல்: மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 29, 2025 12:19 AM

உடுமலை: யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., பள்ளியில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உடுமலை முக்கோணத்திலுள்ள, மரகத யோகாலயத்தில், யோகாசன போட்டிகள் நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் கவியரசு முதலிடம்; எட்டாம் வகுப்பு மாணவன் ரமேஷ் இரண்டாமிடம்; நான்காம் வகுப்பு மாணவன் குருவிஷ்ணு, ஐந்தாம் வகுப்பு மாணவன் அபினத் இருவரும் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், போட்டிகளில் பங்கேற்றவர்களையும் பள்ளி தாளாளர், அறங்காவலர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

