/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவியருக்கு பாராட்டு
/
விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவியருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 02, 2025 11:42 PM

திருப்பூர் : திருப்பூர் கூலிபாளையம் நால் ரோடு அருகில் உள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடந்த ஆண்டு களைப் போன்றே, மேல்நிலைத்தேர்வில் இந்தாண்டும் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது.
பத்தாம் வகுப்பு மாணவி லக்சிதா 500க்கு 497 மதிப்பெண் (தமிழ் - 98, கணிதம் -99, ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் - 100); பிளஸ் 2 மாணவி கோதைகாமாட்சி 600க்கு 597 மதிப்பெண் (தமிழ் -99,ஆங்கிலம் -98, கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் - 100) பெற்று சாதனை படைத்தனர்.
பொறியியலில் சேர்வதற்கு கோதை காமாட்சி, 200க்கு 200 'கட் ஆப்' பெற்றுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமாரை மாணவியர் சந்தித்தனர். மாணவியரையும், இதற்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தையும் முதன்மை கல்வி அலுவலர் பாராட்டினார்.
பள்ளி துணை ஆய்வாளர் ரவி, விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, முதல்வர் அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.