/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவமனை முன் சுகாதாரச் சீர்கேடு
/
மருத்துவமனை முன் சுகாதாரச் சீர்கேடு
ADDED : அக் 19, 2024 12:35 AM

திருப்பூர் : சமீபத்தில் பெய்த மழையில், திருப்பூர் நகரின் பிரதான, வீதி ரோடுகளில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. மழைநீர் வடிகால் அடைப்பால், ஆங்காங்கே மழைநீருடன், கழிவுநீரும் கலந்து, சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், மழைநீர் தேங்கி நிற்கிறது; கால்வாயில் அடைப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, மாநகராட்சிக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், 'இது, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை' என, கூறியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், 'அது, தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்டது; அவர்களுக்கு புகாரை அனுப்பியுள்ளோம்' என பதில் அளித்துள்ளனர்.
'தினமும், நுாற்றுக்கணக்கில் நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனை முகப்பு பகுதியே இத்தகைய நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது,' என்கின்றனர், பொதுமக்கள்.

