/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை
/
ஊராட்சிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : மே 26, 2025 11:03 PM
உடுமலை,; உடுமலை ஒன்றியத்தில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதற்கு, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதையொட்டி, 38 ஊராட்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மழைக்காலங்களில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் அரித்துச்செல்லும் குடியிருப்புகளில் உள்ளவர்களை, பாதுகாப்பான கட்டடங்களில் தங்க வைப்பது, ஆற்றங்கரையோரங்களில் உள்ள ஊராட்சிகளில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள சமுதாய நலக்கூடம், பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டடங்களை தயாராக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயார்நிலையில் இருக்க வேண்டும் எனவும், பாதிப்புகளை தவிர்க்க, தேவையான பொருட்கள், மற்றும் பொதுமக்களை, தங்க வைப்பதற்கான கட்டமைப்புகளையும் தயார்படுத்த, ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.