/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கர்ப்பிணி சிறுமி தற்கொலை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
கர்ப்பிணி சிறுமி தற்கொலை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
கர்ப்பிணி சிறுமி தற்கொலை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
கர்ப்பிணி சிறுமி தற்கொலை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : அக் 25, 2025 06:51 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, ஒருவர் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம், சூலுார் அருகேயுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன், 29, என்பவர், திருமணம் செய்துகொள்வதாக கூறி, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து இதேபோன்று நடந்துள்ளார். சிறுமி கர்ப்பமடைந்தார்.
திருமணம் செய்து கொள்ள சிறுமி வற்புறுத்தியபோது, வேல்முருகன் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக கூறி மறுத்துள்ளார்.மனமுடைந்த சிறுமி, 2019 டிச., மாதம், தீக்குளி த்து தற்கொலை செய்து கொண்டார்.காங்கயம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி கோகிலா, வேல்முருகனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜ ரானார்.

