/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யாவின் பெற்றோருக்கு பிரேமலதா ஆறுதல்
/
ரிதன்யாவின் பெற்றோருக்கு பிரேமலதா ஆறுதல்
ADDED : ஜூலை 09, 2025 11:06 PM
அவிநாசி; அவிநாசியில் வரதட்சணைக் கொடுமையால் கடந்த மாதம் 28ம் தேதி, ரிதன்யா, 27, என்ற இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று தே.மு.தி.க., திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாத்குமார், ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பிரசாத்குமார் வாயிலாக, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, ரிதன்யா பெற்றோரிடம் மொபைல் போனில் பேசி ஆறுதல் கூறி துக்கம் விசாரித்தார்.
பிரேமலதா கூறுகையில், ''இச்சம்பவம் தமிழகத்தையே வேதனைக்குள்ளாக்கியது. இத்தகைய சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழக்கூடாது. ரிதன்யா மரணத்தில் முழு நியாயம் கிடைக்கும் வரை தே.மு.தி.க.,வினர் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். குற்றவாளிகளுக்கு தகுந்த அதிகபட்ச தண்டனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
அவிநாசி நகர செயலாளர் கோபிநாத், திருமுருகன் பூண்டி நகரச் செயலாளர் ஸ்டான்லி, திருப்பூர் வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முனுசாமி,மகளிர் அணி செயலாளர் ஸ்ரீவித்யா, இளைஞரணி பொறுப்பாளர் பிரகாஷ், மாணவரணி செயலாளர் வினோத், மாவட்ட நிர்வாகி சேகர், பழங்கரை ஊராட்சி செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.