/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்கணும்
/
பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்கணும்
ADDED : ஜூலை 03, 2025 08:29 PM

உடுமலை; நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறி உற்பத்தி செய்ய, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில் நிரந்தர பந்தல் அமைத்து, பாகற்காய், பீர்க்கன், புடலை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர். பந்தல் அமைக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், மானியமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பந்தல் அமைத்து சாகுபடி செய்வதால், மகசூல் அதிகரிப்பதுடன் தரமான காய்களையும் உற்பத்தி செய்ய முடிகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில், பந்தல் காய்கறிகளுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை; உற்பத்தியாளர் குழு அமைத்து, வாரந்தோறும் விலை நிர்ணயிக்கும் வகையில், தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால், பந்தல் காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த நடைமுறையால், விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பினரும் பயன்பெறுவார்கள். பந்தல் அமைப்பதற்கான முதலீட்டை திரும்ப பெற, நீண்ட காலமாகிறது. எனவே விலை நிர்ணயத்துக்கான நடவடிக்கையை உடனடியாக துவக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.