/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதமரின் காப்பீடு திட்டம்
/
தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதமரின் காப்பீடு திட்டம்
தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதமரின் காப்பீடு திட்டம்
தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதமரின் காப்பீடு திட்டம்
ADDED : ஆக 21, 2025 09:41 PM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 2025- 26ம் ஆண்டு, காரீப் பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள், அருகாமையிலுள்ள இ- சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீடு செய்யலாம். வெங்காயத்துக்கு ஏக்கருக்கு 2,267.50 ரூபாய், தக்காளிக்கு, 1,582.50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்வதற்கு, வரும் செப். 1ம் தேதி கடைசி நாள்.
மரவள்ளிக்கு, 1,985 ரூபாய், வாழைக்கு, 4,997.50; மஞ்சள், 4,705 ரூபாய் வீதம் காப்பீடு தொகை செலுத்த வேண்டும். வரும் செப்., 16ம் தேதி கடைசி நாள். முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், அடங்கல், டிஜிட்டல் பயிர் சான்றிதழ், ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தக நகல் ஆகியவற்றுடன், பயிர் காப்பீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.