ADDED : ஜன 23, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
'மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 1500 ரூபாயை, 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; தேசிய வேலை உறுதி யளிப்பு திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை என்கிற விதிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்' என, கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 66 பேரை, திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.