/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் காப்பகத்துக்கு பிரித்வி நிறுவனம் உதவி
/
குழந்தைகள் காப்பகத்துக்கு பிரித்வி நிறுவனம் உதவி
ADDED : நவ 13, 2024 05:29 AM

திருப்பூர் : பெண் குழந்தைகள் காப்பகத்துக்கு, பிரித்வி இன்னர் வியர்ஸ் நிறுவனம் சார்பில், சானிடரி நேப்கின் டிஸ்பென்சர் வழங்கப்பட்டது.
திருப்பூரில் இயங்கி வரும் முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்கு, தன்னார்வ அமைப்புகள், பனியன் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள, ஆறு குழந்தைகள் காப்பகங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'சானிடரி நேப்கின்'களை எரிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ரியாஷ் முகமதுபாஷா ஏற்பாட்டில், பிரித்விஇன்னர் வியர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த உதவி வழங்கப்பட்டது.
இதனை பிரித்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலன், காப்பகங்களுக்கான 'சானிடரி நேப்கின் டிஸ்பென்சர்'கருவிகளை, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகள் காப்பக பொறுப்பாளர்கள் வசம், அக்கருவிகள் ஒப்படைக்கப்பட்டன.

