/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் பஸ் சிறைபிடிப்பு; பொதுமக்கள் ஆவேசம்
/
தனியார் பஸ் சிறைபிடிப்பு; பொதுமக்கள் ஆவேசம்
ADDED : நவ 25, 2024 06:25 AM
அவிநாசி; கோவையில் இருந்து நேற்றுமுன்தினம் மதியம், தனியார் பஸ் ஒன்று, திருப்பூர் நோக்கி புறப்பட்டது.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், 5 பெண்கள் அவிநாசிக்கு செல்ல கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லாது; பைபாஸில் சென்று அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் இறங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இது குறித்து, பெண்கள் தங்கள் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதனால், பைபாஸ் ரோட்டில், திரண்ட பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைப்பிடித்தனர்.
திருமுருகன் பூண்டி மற்றும் அவிநாசி போலீசார், பொதுமக்களிடம் பேசினர். போலீசாரின் அறிவுரையின்படி, பெண் பயணிகள், அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடப்பட்டு, பஸ் திருப்பூருக்கு சென்றது.