/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 53 பேருக்கு நியமன ஆணை வழங்கல்
/
தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 53 பேருக்கு நியமன ஆணை வழங்கல்
தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 53 பேருக்கு நியமன ஆணை வழங்கல்
தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 53 பேருக்கு நியமன ஆணை வழங்கல்
ADDED : செப் 20, 2024 10:51 PM

திருப்பூர் : வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 53 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது; இம்முகாம் மூலம், மாற்றுத்திறனாளிகள் பத்து பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம குமார் துவக்கிவைத்தனர்.
பின்னலாடை உற்பத்தி, மெடிக்கல், பொறியியல் துறை சார்ந்த 31 தனியார் நிறுவனத்தினர் நேர் காணல் மூலம், தேவையான பணியாளரை தேர்வு செய்தனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆண்கள் 45 பேர்; பெண்கள் 70 பேர் உள்பட மொத்தம் 115 பேர்; மாற்றுத்திறனாளிகள் 30 பேர் பங்கேற்றனர். முகாமில், ஆண், பெண் 43 பேர்; மாற்றுத்திறனாளி ஆண்கள் 7 பேர்; பெண்கள் 3 பேர் உள்பட மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:
வழக்கமாக வேலை வாய்ப்பு முகாமில் ஒற்றை எண்ணிக்கையிலேயே மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதும்; பணி நியமனம் செய்யப்படுவதும் வழக்கம்.
தொடர் முயற்சிகள் மூலம், இந்த முகாமில், 30 மாற்றுத்திறனாளிகளை பங்கேற்கச் செய்துள்ளோம். திறமையான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யவேண்டும் என, தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, பத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
அடுத்தடுத்த வேலைவாய்ப்பு முகாம்களில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து, மேலும் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளை பங்கேற்கச் செய்யவும்; வேலைவாய்ப்பு பெற்றுத்தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.