/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
/
பொங்கல் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
பொங்கல் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
பொங்கல் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜன 16, 2025 11:39 PM

- நிருபர் குழு-
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் நடந்தன.
மடத்துக்குளம், சங்கராமநல்லுார் பேரூராட்சி வளாகத்தில், சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடந்தது. காலை, பொதுமக்கள் இணைந்து, சமத்துவ பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு, கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், சாக்குப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, உறியடிக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
எம்.பி., ஈஸ்வரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதே போல், உடுமலை வாசவி நகர், குடியிருப்போர் நல அமைப்பு சார்பில், பொங்கல் விழா நடந்தது. காலை, பொங்கல் வைத்து, வழிபாடு நடந்தது. தொடர்ந்து, குழந்தைகள், பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.
மாலை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.இதே போல், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், பொதுமக்கள் ஒன்று கூடி, பொங்கல் பண்டிகையை பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி, மகிழ்ந்தனர்.
* உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். புதிய பானைகளை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பொங்கல் விழாவையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான வள்ளிக்கும்மி, கோலாட்டம், கும்மியாட்டம், இளவட்டக்கல் துாக்குதல், உரியடித்தல், கோலப்போட்டி, ஓவியப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி முதல்வர் கல்யாணி மற்றும் துறை பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே நாகரூத்1, நாகரூத்2 மலைவாழ் குடியிருப்பு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அவ்வகையில், ஆனைமலை அருகே நாகரூத்1, நாகரூத்2 மலைவாழ் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இங்கு, 84 குடும்பத்தார் வசித்து வரும் நிலையில், அரசு சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்து, அனைத்து குடும்பத்தினருக்கும் வேட்டி மற்றும் சேலை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, பழங்குடியினர் நலத்துறை வாயிலாக அங்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் ஆய்வு செய்தார். இவ்விழாவில் பொள்ளாச்சி சப்கலெக்டர் கேத்தரின்சரண்யா, தாசில்தார் உட்பட பலர் பங்கேற்றனர்.
வால்பாறை
வால்பாறை நகரதி.மு.க., சார்பில் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நகர செயலாளர் சுதாகர் தலைமையில் நடந்தது.
விழாவில் கரும்பு மற்றும் மண்பானையில் தமிழ்கலாசாரப்படி பொங்கல் வைக்கப்பட்டது. விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், உமாமகேஸ்வரி, தி.மு.க., அவைத்தலைவர் செல்லமுத்து, பொருளாளர் அம்பிகைசுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வால்பாறை அண்ணாநகர் ராமர் கோவில் திருவிழாவையொட்டி விளையாட்டு விழா, பொங்கல்விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது.
விளையாட்டு போட்டியில் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாலையில் நடந்த விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.