/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : அக் 21, 2024 06:42 AM

உடுமலை : காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா, துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உட்பட முப்பெரும் விழா நடந்தது.
விழாவில் பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சையது முகமது குலாம் தஸ்கதிர் வரவேற்றார். பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெய்சிங் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்கள் திருமலைசாமி, சம்பத்குமார், வஞ்சிமுத்து மாணவர்களை ஊக்குவித்து பேசினர். பள்ளியின் துாய்மை பணியாளருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு பயிற்சி அளித்த ருக்குமணி ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்த உடற்கல்வி ஆசிரியர் விஜயன், கார்த்திகேயன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முதல் பருவம் முதல் காலாண்டுத் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர்.