/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் விளையாட்டு விழா மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளியில் விளையாட்டு விழா மாணவர்களுக்கு பரிசு
ADDED : நவ 18, 2025 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
விழாவில், பள்ளி தாளாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., கண்ணன், மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவர்கள் நடத்திய மவுனமொழி நாடகம் அனைவரின் வரவேற்பை பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சைலஜா செய்திருந்தார்.

