/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆம்னி பஸ் -- லாரி மோதல் 23 அய்யப்ப பக்தர்கள் காயம்
/
ஆம்னி பஸ் -- லாரி மோதல் 23 அய்யப்ப பக்தர்கள் காயம்
ஆம்னி பஸ் -- லாரி மோதல் 23 அய்யப்ப பக்தர்கள் காயம்
ஆம்னி பஸ் -- லாரி மோதல் 23 அய்யப்ப பக்தர்கள் காயம்
ADDED : நவ 17, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து, 37 பக்தர்களுடன் கேரளாவின்சபரிமலைக்கு, தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது.
நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த நியூ திருப்பூர் அருகே சேலம் - கொச்சி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது.
கர்நாடகாவின் தும்கூரி லிருந்து கோவைக்கு மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு, முன்னே சென்ற, 16 சக்கர லாரியின் பின்புறம் பஸ் பலமாக மோதியது.
இதில் பஸ்சின் முன்புறம் அப்பளமானது. பஸ் டிரைவர் சேகர், 26, மற்றும், 23 அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர். விசாரணையில், பஸ் டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்தது தெரிந்தது.