ADDED : நவ 17, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் அடுத்த சித்தம்பலம் எஸ்.ஏ.பி., சேரன் மாநகரில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில், திருப்பூர் ஸ்ரீஜோதி ஸ்வரூபன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், அய்யப்பன் விக்ரஹம் பிராண பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு, சிற்ப சாஸ்திர விதிகளின்படி, அய்யப்பனின் பஞ்சலோக விக்ரஹம் தயார் செய்யப்பட்டது. சிறப்பு வேள்வி வழிபாடுகளை தொடர்ந்து, விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகர், அய்யப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

