/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஐ.ஆர். கூடாது; த.வெ.க. ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆர். கூடாது; த.வெ.க. ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 17, 2025 01:31 AM

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து, திருப்பூரில், த.வெ.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை நிறுத்த வேண்டும்.
வாக்காளர்களை குழப்ப கூடாது. வாக்காளர்களை அலைக்கழிக்காமல், அவர்கள் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, த.வெ.க. சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர், தெற்கு மாவட்ட செயலாளர் திருமலை, கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி, வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

